நாம் அனைவரும் கலா ரசிகர்கள்
கலையை ரசித்த நம்மையே ரசித்து
பிரியமாய் தனதாக்கிக் கொண்ட
ரசிகப் பிரியவே - வாழ்க பல்லாண்டு
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
ஓ எம் ஆருக்கு ஓடோடி வந்த நாம்
இயற்கையை ரசித்தோம் - இனிய கடல்
காற்றில் கலந்தோம்
தூய காற்றை துய்த்தோம்
துல்லிய நீரை உண்டோம்
அரவமற்ற நெடுஞ்சாலையில்
அமர்க்களமாய் நடந்தோம்
ஒன்று மட்டும் குறை நமக்கு
பசி - கலைப்பசி தீரவில்லையே
மயிலையும் தி நகரும் தான்
திருவிழா நகரங்ளல
நமக்கு மட்டும் இல்லையா
பாட்டும் பரதமும்
குறை தீர்க்க நீ வந்தாய்
குறை ஒன்றுமில்லாத ரசிகப்பிரியா!!
தமிழுக்கு மூன்று முகம்
இயல் இசை நாடகம்
இயலுக்கு பட்டிமன்றம்
இசைக்கு இனிய சங்கீதம்
நாடகத்துக்கு – நவிலவே வேண்டாம்
மூன்றுமட்டுமா கலந்தாய் நீ
மூத்தவரும் இளையவரும் இசைக்க
பழமையும் புதுமையும் புகுத்தி
நாடிவரும் நல்லோரின் மனமறிந்து
சுவையாய் கூட்டினாய் - கலந்தெமக்கு ஊட்டி
நன்றிகள் பல ரசிகப்ரியா
நலமுடன் வெள்ளி பொன் விழா
சென்றடைய - சீர் மல்கிட
வாழ்த்துகிறோம் - வணங்குகிறோ
留言